CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, March 14, 2008

காத்திருப்பேன் உனக்காக

உறவின்றி கிடந்தேன் உலகுக்குச் சுமையாக
உலகமாய் நீ வந்தாய் உறவாகிப் போனேனடா
உருவமின்றி வாழ்ந்தேன் உயிர் உடலுக்குச் சுமையாக
உயிராய் நீ வந்தாய் உருமாறிப் போனேனடா

ஒரு நாள் உன்னோடு கழித்த வேளையில்
ஒரு ஜென்மம் வாழ்ந்ததாய் தோன்றிதேனடா
ஒரு முறை உன்னைக் கண்ட வேளையில்
ஒரு நொடியில் மீண்டும் பிறந்தேனடா

என் வழியில் நீ வந்த வேளையில்
என்னை நான் மறந்தேனடா
எல்லாமே நீதான் எண்ணிய வேளையில்
எவரும் வேண்டாமென உதறினேனடா

பத்து திங்கள் சுமந்த தாயை மறந்தேன்
பருவக் கோளாறு கண்களை மூடியதால்
படிப்பு ஒரு மூலையில் எறிந்தேன்
பயம் என்னை விட்டு அகன்றியதால்

இதயத் தேவதையாக உன் மனதில்
இறக்கும் வரையில் என எண்ணினேனடா
இளமை இலைகள் உதிரும் வேளையில்
இல்லாமல் போவேன் என நினைக்கலடா

வீசப்பட்டது என் மனம் உன்னிடத்திலிருந்து
வீழ்ந்து போனேன் அந்நொடியிலேயே
வீறு கொண்டெழுந்தது கோபம் என்னிடத்திலிருந்து
வீண் என்பதால் கைவிட்டேன் அப்பொழுதுலேயே

கண்ணீர் என் கண்களில் தஞ்சமடைந்தது
களையிழந்து போனது என் வாழ்வு
கரை தேடினேன் எட்டிய தூரம் வரை
கடலோடு கரைந்து போன என் காதலுடன்

தூக்கி எறியப்பட்ட என் மனம் எனக்கில்லை
துயரம் சூழ்ந்தது என் வாழ்விலேயே
தூக்கம் மாத்திரை நாடினேன் இறப்பதற்கில்லை
துவண்டு விடவில்லை இன்னும் என் வாழ்விலேயே

காதலில் வீழ்ந்தேன் உன்னிடத்தில்
கானலாய் போனாய் என்னிடத்தில்
காலத்தின் பதிலுக்காக
காத்திருப்பேன் உனக்காக

ஆக்கம்,
மேகலா
14/3/2008 FRIDAY 3.48AM

0 comments: