CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, September 2, 2008

ஒரு நாளை ஒரு ஜென்மமாய்

ஒரு நொடி பார்வையில்
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவனே


மீண்டும் அத்தரிசனத்திற்காக
தினம் தினம் காத்திருக்கின்றேனே
புரியலையா உனக்கு


உன்னைக் கண்ட நாள் முதலாய்
உன்னையே யாசிக்கின்றேன்
கவிதையாய் வாசிக்கின்றேன்


காகிதத்தில் உன் பெயரை
எழுதிருந்தால்
கிழித்து இருப்பேன்
குப்பையோடு குப்பையாக


கையில் உன் பெயரை
எழுதிருந்தால்
கழுவி இருப்பேன்
நீரோடு நீராக


பாழாய்ப் போன என்
மனதில் அல்லவா
பச்சை குத்தியுள்ளேன்
உனது பெயரை………


உள்ளம் உருகுதே
உன் பெயரைச் சொல்லி
விழிகள் தேடுதே
உன் வரவை எண்ணி


ஒரு நாள் ஒரு பார்வை
தரிசனம் செய்து விடுக
ஒரு நாளை ஒரு ஜென்மமாய்
வாழ்ந்து விடுவேன்!!!



ஆக்கம்
மேகலா
Sept 01 2008 Monday 9.45pm

Wednesday, July 23, 2008

கட்டாயப்படுத்தலாமா

கட்டாயப்படுத்தலாமா
உன்னை…………………
என்னோடு
நட்புக்கொள்ள……………..
கட்டாயப்படுத்துகிறேனா??


விலகுவது
உனக்கோ எளிதானதாக இருக்கலாம்
எனக்கோ விலங்கிடுவது போல உள்ளதே


உன் நட்பில் சுகம் கண்ட எனக்கு
மனம் அதனையே நாடுகின்றதே

நான் காதல் கொண்டேன்

என் தோழியே
வாய் திறந்து நான் பேசாமலே
என் உள்ளத்தை அறிந்திடுவாய் நீ.......
பின் ஏன் இந்த வீண் விதண்டாவதம்...


உன்னை மகிழ வைக்க
நான் பொய்யுரைக்கத் தயார்
நான் காதல் கொண்டேன்........


காதல் கடிதம் பெற்றதில்லை
நான் காதல் கொண்டேன்

கைக்கோர்த்து கடற்கரையில் நடந்ததில்லை
நான் காதல் கொண்டேன்

தொலைப்பேசியில் மணிக்கணக்கில் பேசியதில்லை
நான் காதல் கொண்டேன்

காதலர் தினத்தைக் கொண்டாடியதில்லை
நான் காதல் கொண்டேன்

கால் வலிய ஒருவருக்காகக் காத்திருந்ததில்லை
நான் காதல் கொண்டேன்

'காதலிக்கின்றேன்' என் நா உச்சரித்ததில்லை
நான் காதல் கொண்டேன்

நான் காதலிக்கப்படுகின்றேன் என உணர்ந்ததில்லை
நான் காதல் கொண்டேன்

ஒருவருக்காக என் மனம் உருகவில்லை
நான் காதல் கொண்டேன்

கண்ணீர் சிந்தியதில்லை ஓர் ஆணுக்காக
நான் காதல் கொண்டேன்

மௌனம் மொழி தெரியாது
நான் காதல் கொண்டேன்

என் மனம் என்னிடம் இருக்கின்றது
நான் காதல் கொண்டேன்

உன் மனம் மகிழ
என் மனம் எங்கே இருக்கின்றது
என நான் பொய்யுரைக்க????


ஆக்கம்
மேகலா
saturday, July 19 2008
6.30PM

Saturday, June 21, 2008

எங்கே சென்றன???

நான் நடக்கும்போது

கைப்பிடித்த கரங்கள்


நான் சாப்பிடும்போது

ஊட்டிவிட்ட விரல்கள்


நான் உறங்கும்போது

தலையனையான மடி


நான் ஓடிவிளையாடும்போது

என்னோடு ஓடிய கால்கள்


நான் காதலிக்கும்போது

மகிழ்ந்த மனத்திரை


நான் அழும்போது

எங்கே சென்றன???


20/06/2008 fri 10.15pm

Monday, March 24, 2008

ஒரு நொடிக் கவிதை

*******************************************************

புயல் வீசத்தொடங்கியது என் வாழ்வில்
புயலாய் நீ வந்ததால்

*******************************************************

வெயில் கூட குளிர்ந்ததடா
விழிகள் உன்னைக் கண்டதால்

*******************************************************

மழைச் சாரல் ஜன்னலில் படிய
மழை ஓவியமாய் உன் முகம் தெரிகின்றதே

*******************************************************

மின்னலாய் ஒரு பார்வை பார்த்தான்
மின்னல் போல சென்று விட்டான்
என் இதயத்தைத் தாக்கி விட்டு

*******************************************************

நீ
காற்று
உலவுகின்றாய்
என்னைச் சுற்றி
தொட இயலாது உன்னை
ஆனால் சுவாசிப்பேன் உன்னை
இறுதி மூச்சு வரை

*******************************************************

Friday, March 21, 2008

பண்டை மாற்றம்

காதல் ஒரு பண்டை மாற்றம்
இதயம் கொடுத்து இதயம் வாங்குவதால்

உன்னிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என் இதயம்
ஏற்க மறுக்கிறது உன் மனம்

உன் இதயத்தின் வருகைக்காக
திறந்திரந்தது என் மனம்

ஏங்கிய மனம் ஏமாற்றம் கற்றது
பண்டை மாற்றம் தோல்வியில் முடிந்தது

உன் இதயத்தில் மறுக்கப்பட்டவள் நான்
என் இதயத்தில் நிரந்தரமானவன் நீ

என் உள்ளத்தை விட்டு சென்று விடு – இல்லையேல்
என் உயிரை எடுத்து விடுடா

உயிர் பிரிந்தாலும்
உள்ளம் உன் பெயரைச் சொல்லும்!

அறிவாயா நீ?

ஆக்கம்,
மேகலா

19/3/2008 Wednesday 5.45am

Friday, March 14, 2008

காத்திருப்பேன் உனக்காக

உறவின்றி கிடந்தேன் உலகுக்குச் சுமையாக
உலகமாய் நீ வந்தாய் உறவாகிப் போனேனடா
உருவமின்றி வாழ்ந்தேன் உயிர் உடலுக்குச் சுமையாக
உயிராய் நீ வந்தாய் உருமாறிப் போனேனடா

ஒரு நாள் உன்னோடு கழித்த வேளையில்
ஒரு ஜென்மம் வாழ்ந்ததாய் தோன்றிதேனடா
ஒரு முறை உன்னைக் கண்ட வேளையில்
ஒரு நொடியில் மீண்டும் பிறந்தேனடா

என் வழியில் நீ வந்த வேளையில்
என்னை நான் மறந்தேனடா
எல்லாமே நீதான் எண்ணிய வேளையில்
எவரும் வேண்டாமென உதறினேனடா

பத்து திங்கள் சுமந்த தாயை மறந்தேன்
பருவக் கோளாறு கண்களை மூடியதால்
படிப்பு ஒரு மூலையில் எறிந்தேன்
பயம் என்னை விட்டு அகன்றியதால்

இதயத் தேவதையாக உன் மனதில்
இறக்கும் வரையில் என எண்ணினேனடா
இளமை இலைகள் உதிரும் வேளையில்
இல்லாமல் போவேன் என நினைக்கலடா

வீசப்பட்டது என் மனம் உன்னிடத்திலிருந்து
வீழ்ந்து போனேன் அந்நொடியிலேயே
வீறு கொண்டெழுந்தது கோபம் என்னிடத்திலிருந்து
வீண் என்பதால் கைவிட்டேன் அப்பொழுதுலேயே

கண்ணீர் என் கண்களில் தஞ்சமடைந்தது
களையிழந்து போனது என் வாழ்வு
கரை தேடினேன் எட்டிய தூரம் வரை
கடலோடு கரைந்து போன என் காதலுடன்

தூக்கி எறியப்பட்ட என் மனம் எனக்கில்லை
துயரம் சூழ்ந்தது என் வாழ்விலேயே
தூக்கம் மாத்திரை நாடினேன் இறப்பதற்கில்லை
துவண்டு விடவில்லை இன்னும் என் வாழ்விலேயே

காதலில் வீழ்ந்தேன் உன்னிடத்தில்
கானலாய் போனாய் என்னிடத்தில்
காலத்தின் பதிலுக்காக
காத்திருப்பேன் உனக்காக

ஆக்கம்,
மேகலா
14/3/2008 FRIDAY 3.48AM

Sunday, March 9, 2008

உயிரெழுத்து என் தலையெழுத்து

அன்பில் அடிமையானேன்

ஆசையில் ஆட்கொண்டேன்

இன்னல்களில் இருப்பிடமடைந்தேன்

ஈன்றப்பொழுது ஈசனடித்தொழுதேன்


உறவுகளால் உருவமிழந்தேன்

ஊமையாய் ஊன்றி போனேன்

என்னை எளிமைப்படுத்தினேன்

ஏக்கங்கள் ஏமாற்றமடைந்தது


ஐயம் ஐக்கியமானது

ஒப்புக்கு ஒளிந்து வாழ்கிறேன்

ஓரமாக - வாழ்க்கை எனும் என் வட்டத்தில்

ஆக்கம்
மேகலா

Tuesday, March 4, 2008

உண்மையான தோழர்கள்

Friendster-யில் ஒரு சின்ன விளையாட்டு வைச்சேங்க...அதாவது, யார் என்னைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்காங்கனு என்கின்ற போட்டி....மொத்தம் இருபது கேள்விகள்...
ஆனால், என்னைப் பொறுத்த வரை அவர்கள் எடுத்த புள்ளிகள் முக்கியமில்லை. என்னைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட சிரத்தையே என்னை நெகிழ வைத்துள்ளது.
உங்கள் தோழமைக்கு என் சிரம் தாழ்கிறது.

Sunday, March 2, 2008

என் அறை.....என் உலகமாகிறது

நான்கு சுவரைப் பார்த்து அறையிலேயே கிடப்பது கொடுமையிலும் கொடுமைங்க.. தாங்க முடியிலங்க. என்னதான் செய்வதுன்னு தெரியமாட்டேங்கது....

இருக்கின்ற படமெல்லாம் பார்த்து முடிச்சாச்சு...எத்தனை முறை தான் கேட்டப் பாட்டே திரும்ப திரும்ப கேட்பதுங்க???
என்னடா வாழ்க்கையப்பா இது?????

Thursday, February 28, 2008

பெண்களும் உணவும்

இன்று நானும் என் நண்பர்களும் பல்கலைக்கழகத்திலுள்ள ஒரு சிற்றுண்டிச்சாலையில் உணவருந்தி கொண்டியிருந்தோம். அவ்வேளையில் நடந்த ஒரு சம்பவம் எங்களைச் சிரிக்க வைத்தது.



உணவு. எதற்காக நாம் உணவு உட்கொள்கிறோம்? பசியைப் போக்குவதற்காகத் தானே!! அதில் எதுக்குங்க ஒரு போலித்தனம்........ பக்கத்தில் நண்பர்கள் இருந்திடக் கூடாது.......உடனே ஒரு நாடகத்தை அரங்கேற்றி விடுவார்கள்.....



நாங்கள் அமர்ந்த பக்கத்திலுள்ள மேசையில் ஒரு பெண்கள் கூட்டம். ஒரு மாணவி சாப்பிட்டு இருக்காங்க..மற்ற இரண்டு மாணவிகள் உணவு இருந்தும் சாப்பிடாமல் யாருக்கோ காத்திட்டு இருந்தாங்க. அவங்க சாப்பிட்டாங்களோ இல்லையோ........அந்த கூட்டத்திற்கு பின்னால் வந்த நாங்களே சாப்பிட்டு முடித்திட்டோம்ங்க. ஆனால், சாப்பாடு அவங்களுக்காகக் காத்திட்டு இருந்தது...



பாவம் அந்த சாப்பாடு! பிறகு, அவர்களின் நண்பர் ஒருவர் வந்த பின் சாப்பிட ஆரம்பித்தார்கள். அதிலும் ஒரு கூத்துங்க. உணவை ஒழுங்காகச் சாப்பிட வேண்டியதானே... என்னமோ உயிர் கொண்ட உணவுக்கு உடல் வலிக்கும் என்பது போல் அவ்வளவு ஆர அமர சாப்பிடும் அவர்களின் கை வந்த கலையைப் பார்க்க இரு கண்கள் போதாதுங்க. ஒரு பதம் சோறு சாப்பிட அவர்களுக்குப் பத்து நிமிடம் தேவைங்க. கையில் கரண்டி, கரண்டியில் உணவு, உணவுக்காக அவர்களின் நா காத்தியிருந்து. பத்து நிமிடமாக...........



அது மட்டுமா, யாராவது ஆண்கள் பக்கத்தில் இருந்திடக்கூடாது. உடனே, பல அறிவாளி பெண்கள் செய்யும் ஒரே வேளை......உணவை முழுமையாகச் சாப்பிட்டு முடிக்க மாட்டார்கள். ஒரு கால் வாசி உணவைத்தான் சாப்பிடுவார்கள் இந்த 'அறிவாளி' பெண்கள். முழுமையாகச் சாப்பிட்டு முடித்தால் உலகம் இடிந்து விழுந்திடும்ல! ஓர் ஆண் முன் தங்களது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார்களாம். ஆனால் அறையில் தனியாக இவர்கள் சாப்பிடும் காட்சி, கண் கொள்ளா காட்சி. இது ஒரு மடத்தனமான பெண்களின் எண்ணம். உலகம் என்னதான் மாறினாலும் இவர்களைத் திருத்தவே முடியாது!


ஒரு பெண்ணாக இதைக் கூற உண்மையிலேயே நான் வெட்கப்படுகிறேங்க.


பெண்களே, இதைப் படித்தாவது திருந்த பாருங்க.


நாளைய சமுதாயம் நமது கையில்!!!!!

Wednesday, February 27, 2008

பரீட்ச்சை vs திருமணம்

பரீட்ச்சை எழுவது கஷ்டமல்ல
பரீட்ச்சைக்காகப் படிப்பது தான் கஷ்டம்

திருமணம் செய்து கொள்வது இலகு.........ஆனால்
திருமணம் செய்து வாழ்வது தான் கஷ்டம்

பரீட்ச்சைக்கும் திருமணத்திக்கும் உள்ள வித்தியாசம்

பரீட்ச்சையானது, இன்று அவதிபடுவீர்............. நாளை மகிழ்ச்சியடைவீர்
திருமணமானது, இன்று மகிழ்ச்சியடைவீர்............ நாளை அவதிபடுவீர்

வணக்கம்.

என் பார்வையில்,

உலகிலேயே உன்னதமான மொழி
காலத்தால் அழியாத மொழி
பழமைவாய்ந்த மொழி
அற்புதமான மொழி
செம்மொழி
என் தாய்மொழி
தமிழ்மொழி

தமிழ் மொழிக்கு ஒரு சமர்ப்பணம்


வாழ்வது ஒரு முறை....
வாழ்த்தட்டும் தலைமுறை....